எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்க விண்ணப்பித்திருந்த 7 இலங்கை வீரர்களில், இதுவரை மூவருக்கு மாத்திரம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை (SLC) அனுமதி (NOC) வழங்கியுள்ளது.
உடல் தகுதி சோதனைகளில் (Physical Performance Test) சித்தியடைந்ததையடுத்து பின்வரும் வீரர்களுக்கு தடையின்றி விளையாட அனுமதி கிடைத்துள்ளது:
பதும் நிஸ்ஸங்க (Delhi Capitals)
துஷ்மந்த சமீர (Delhi Capitals)
கமிந்து மெண்டிஸ் (Sunrisers Hyderabad)
இம்முறை ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அனைத்து ஒப்பந்த வீரர்களுக்கும் 8 வார கால விசேட உடற்தகுதி பயிற்சித் திட்டத்தை SLC முன்னெடுத்துள்ளது. இதில் சித்தியடைபவர்களுக்கு மாத்திரமே வெளிநாட்டுத் தொடர்களில் விளையாட அனுமதி வழங்கப்படும் என சபை கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஏனைய 4 நட்சத்திர வீரர்களும் அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ணத் தொடரின் போது காயமடைந்ததால், தற்போது புனர்வாழ்வு (Rehabilitation) பயிற்சியில் உள்ளனர். அவர்கள் பூரண குணமடைந்து உடற்தகுதி சோதனையில் தேறிய பின்னரே ஐபிஎல் அணிகளுடன் இணைய முடியும்:
மதீஷ பத்திரண (Kolkata Knight Riders) - கணுக்கால் காயம்.
வனிந்து ஹசரங்க (Lucknow Super Giants) - தொடை தசைநார் காயம்.
நுவான் துஷார (Royal Challengers Bengaluru) - பெருவிரல் எலும்பு முறிவு.
ஈஷான் மலிங்க (Sunrisers Hyderabad) - தோள்பட்டை காயம்.



